தனியுரிமைக் கொள்கை

கடைசியாகப் புதுப்பித்தது: 17 நவம்பர் 2026

உங்கள் விபரங்களுக்குப் பொறுப்பானவர்: தமிழ் கொடி (பிரைவேட்) லிமிடெட் — Tamil Kodi (Pvt) Ltd (PV 00273503), 217, பலாலி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம், இலங்கை. Email: [email protected].

நாம் சேகரிப்பவை

  • அறிக்கைக்கான விபரம்: பெயர் அல்லது முதலெழுத்து, பால், பிறந்த திகதி, நேரம், இடம்; எண்கணிதத்துக்கு ஆங்கிலப் பெயர்(கள்); பழைய ஜாதக விபரம், விருப்பப்பட்டால் அதன் படம்.
  • தொடர்புக்கு: email; விருப்பப்பட்டால் WhatsApp இலக்கம்.
  • கட்டணம்: order தொகை, நாணயம், card இன் நாடு. Card எண்ணை நாம் பார்ப்பதோ சேமிப்பதோ இல்லை — அது Stripe / PayHere இடம் மட்டும்.
  • தொழில்நுட்பம்: உள்நுழைவுக்கான ஒரு cookie, விலையைக் காட்ட உங்கள் நாடு (IP இலிருந்து), மொழித் தெரிவு. விளம்பர / tracking cookie கள் இல்லை.

ஏன் பயன்படுத்துகிறோம்

நீங்கள் கேட்ட அறிக்கையைக் கணித்து உருவாக்க, அனுப்ப, "என் ஓலை" பக்கத்தில் காட்ட, கட்டணம் பெற, உங்கள் கேள்விகளுக்குப் பதில் தர. நீங்கள் ஒப்புக்கொண்டால் மட்டும் புதிய சேவைகள் பற்றி அறிவிப்போம்.

யாருடன் பகிரப்படுகிறது

  • Stripe, PayHere — கட்டணம் (Stripe கட்டணங்களை Tubetamil, டென்மார்க், CVR 33679246 எமது சார்பில் பெறுகிறது).
  • Anthropic (Claude) — அறிக்கை எழுத்தைத் தயாரிக்க/சரிபார்க்க; பிறப்பு விபரம் மட்டும், பெயர் இல்லாமல்.
  • Google (Gemini / Cloud Text-to-Speech) — குரல் விளக்கம் உருவாக்க.
  • OVHcloud (server), Cloudflare (DNS, email forwarding).

இவர்கள் எங்கள் சார்பில் மட்டும் செயல்படுகிறார்கள். உங்கள் விபரங்களை நாம் விற்பதில்லை. பழைய ஜாதகப் படங்கள் எங்கள் அலுவலகம் மட்டுமே பார்க்கும்; வெளிச் சேவைகளுக்கு அனுப்பப்படுவதில்லை.

எமது சமூக ஊடக video க்கள்

ஓலை தனது சொந்த short video க்களை தனது சொந்த Facebook, Instagram, YouTube, TikTok கணக்குகளில் போடுவதற்கு அந்த நிறுவனங்களின் API களைப் பயன்படுத்துகிறது (YouTube க்கு YouTube API Services). இந்த video க்களில் வாடிக்கையாளர் விபரம் எதுவும் இல்லை; பார்வையாளர்களின் கணக்கு விபரங்களை நாம் பெறுவதோ சேமிப்பதோ இல்லை. YouTube ஐப் பயன்படுத்தும்போது YouTube சேவை விதிமுறைகள் பொருந்தும்; Google தனியுரிமைக் கொள்கை: policies.google.com/privacy.

எவ்வளவு காலம்

நீங்கள் உங்கள் அறிக்கைகளை மீண்டும் பார்க்க, உங்கள் கணக்கு இருக்கும் வரை வைத்திருப்போம். கணக்கு விலக்கக் கோரினால் 30 நாளுக்குள் நீக்குவோம் — சட்டப்படி வைத்திருக்க வேண்டிய கட்டணப் பதிவுகள் தவிர.

உங்கள் உரிமைகள்

உங்கள் விபரங்களின் பிரதி, திருத்தம், நீக்கம், சந்தைப்படுத்தல் நிறுத்தம் ஆகியவற்றைக் கேட்கலாம் — [email protected]. ஐரோப்பா / UK இல் உள்ளவர்கள் தங்கள் நாட்டுத் தரவுப் பாதுகாப்பு அதிகாரியிடமும் முறையிடலாம்.

பிள்ளைகள்

பிள்ளைகளின் ஜாதகத்தைப் பெற்றோர் / பாதுகாவலர் மட்டுமே கேட்கலாம். பிள்ளைகளுக்கு share card கள் உருவாக்கப்படுவதில்லை.

பாதுகாப்பு

எல்லா இணைப்புகளும் HTTPS. அறிக்கைகள் ஒவ்வொரு order க்கும் தனியான ரகசிய link மூலம் மட்டுமே திறக்கும்.