பணம் திருப்பும் கொள்கை

கடைசியாகப் புதுப்பித்தது: 17 நவம்பர் 2026

ஓலை அறிக்கைகள் digital பொருட்கள்; பணம் செலுத்தியதும் உடனே உங்களுக்காகத் தயாரிக்கப்படுகின்றன. அதனால் கீழே உள்ள விதிகள்:

முழுப் பணமும் திருப்பித் தரப்படும்போது

  • பணம் செலுத்தி 24 மணி நேரத்துக்குள் அறிக்கை உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால்.
  • எங்கள் பக்கப் பிழையால் அறிக்கை தவறாக இருந்தால் (உதாரணம்: நீங்கள் தந்த விபரத்துக்கு மாறான கணிப்பு, பாதியில் நின்ற அல்லது திறக்காத கோப்பு) — முதலில் சரிசெய்து மீண்டும் தருவோம்; சரிசெய்ய முடியாவிட்டால் முழுப் பணமும்.
  • ஒரே order க்கு இருமுறை பணம் எடுக்கப்பட்டிருந்தால் — மேலதிகத் தொகை.

பணம் திருப்பித் தரப்படாதபோது

  • அறிக்கை சரியாக உருவாகி உங்களுக்குக் கிடைத்த பின், மனம் மாறியதற்காக அல்லது நூல்கள் சொல்வது பிடிக்கவில்லை என்பதற்காக. (order இன்போது, அறிக்கை உடனே தயாரிக்கப்படுவதால் 14 நாள் திரும்பப் பெறும் உரிமையை விட்டுக்கொடுப்பதை நீங்கள் ஏற்றீர்கள்.)
  • நீங்கள் தந்த பிறந்த திகதி / நேரம் / இடம் / பெயர் தவறாக இருந்தால் — ஆனால் 7 நாளுக்குள் எழுதினால், சரியான விபரத்துடன் ஒருமுறை இலவசமாக மீண்டும் உருவாக்கித் தருவோம்.

எப்படிக் கேட்பது

[email protected] க்கு உங்கள் order எண் (அறிக்கை link இல் உள்ள o_… எண்) மற்றும் காரணத்துடன் எழுதுங்கள். 3 வேலை நாளுக்குள் பதில் தருவோம். ஒப்புக்கொண்ட பணம், செலுத்திய அதே card / கணக்குக்கு 5–10 வேலை நாளில் திரும்பும் (வங்கியைப் பொறுத்து).

இந்தக் கொள்கை உங்கள் நாட்டுச் சட்டம் தரும் நுகர்வோர் உரிமைகளைக் குறைக்காது.