பயன்பாட்டு நிபந்தனைகள்
கடைசியாகப் புதுப்பித்தது: 20 நவம்பர் 2026
ஓலை (getolai.com) தமிழ் கொடி (பிரைவேட்) லிமிடெட் — Tamil Kodi (Pvt) Ltd (PV 00273503) நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. முகவரி: 217, பலாலி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம், இலங்கை. Email: [email protected]. இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ அறிக்கை வாங்குவதன் மூலமோ இந்த நிபந்தனைகளை ஏற்கிறீர்கள்.
1. சேவை என்ன
ஓலை, நீங்கள் தரும் பிறந்த திகதி, நேரம், இடம் அல்லது பெயர் கொண்டு கணித்து, பழைய ஜோதிட, எண்கணித நூல்கள் சொல்வதைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் digital அறிக்கைகளாக (PDF, குரல் விளக்கம், dashboard) தருகிறது. கிரக நிலைகள் Swiss Ephemeris மூலம் கணிக்கப்படுகின்றன.
2. இது ஆலோசனை அல்ல
அறிக்கைகள் நூல்கள் சொல்வதை மட்டும் தருகின்றன. அவை மருத்துவ, சட்ட, நிதி, உளவியல் ஆலோசனை அல்ல; எந்த நிகழ்வையும் உறுதியளிப்பதில்லை. முக்கிய முடிவுகளுக்கு உரிய நிபுணரை அணுகுங்கள்.
3. யார் வாங்கலாம்
- வாங்குபவருக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- வேறொருவரின் விபரம் தந்தால், அவரின் அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும். பிள்ளைக்கு என்றால் நீங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருக்க வேண்டும்.
- தந்த விபரங்கள் சரியானவை என்பது உங்கள் பொறுப்பு; தவறான நேரம் / இடம் தவறான கணிப்பைத் தரும்.
4. விலை, கட்டணம்
விலைகள் தளத்தில் உங்கள் நாட்டு நாணயத்தில் காட்டப்படுகின்றன. கட்டணம் ஒருமுறை மட்டும்; தானியங்கித் தொடர் கட்டணம் இல்லை. Card கட்டணங்கள் Stripe மூலமும், இலங்கையில் PayHere மூலமும் பாதுகாப்பாகச் செயலாக்கப்படுகின்றன; உங்கள் card விபரங்களை ஓலை சேமிப்பதில்லை. Stripe மூலமான (இலங்கைக்கு வெளியேயான) கட்டணங்களை Tubetamil (டென்மார்க், CVR 33679246) எமது சார்பில் பெறுகிறது — உங்கள் வங்கி அறிக்கையில் "GETOLAI.COM" எனத் தெரியும்.
5. வழங்கல்
பணம் செலுத்தியதும் அறிக்கை தானாக உருவாகி, பொதுவாகச் சில நிமிடங்களில் "என் ஓலை" பக்கத்தில் கிடைக்கும் (பணம் செலுத்திய பின் வரும் பக்கத்தின் link மூலமும்). ஒவ்வொரு அறிக்கையும் வெளியாகும் முன் தானியங்கிச் சோதனைகளைக் கடக்கிறது; சோதனையில் சிக்கல் வந்தால் சிறிது தாமதமாகலாம்.
6. திரும்பப் பெறுதல், பணம் திருப்புதல்
பணம் திருப்பும் கொள்கை பக்கத்தைப் பாருங்கள்.
7. உரிமைகள்
அறிக்கைகள் உங்கள் தனிப் பயன்பாட்டுக்கானவை. Share card களை social media இல் பகிரலாம். அறிக்கைகளை மறுவிற்பனை செய்யவோ வணிக ரீதியில் பயன்படுத்தவோ கூடாது.
8. பொறுப்பு வரம்பு
சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு, ஓலையின் பொறுப்பு அந்த அறிக்கைக்கு நீங்கள் செலுத்திய தொகைக்கு மேல் இருக்காது. அறிக்கையை வைத்து எடுக்கும் முடிவுகள் உங்கள் பொறுப்பு.
9. மாற்றங்கள், சட்டம்
இந்த நிபந்தனைகளை நாம் புதுப்பிக்கலாம்; புதிய பதிப்பு இந்தப் பக்கத்தில் திகதியுடன் இருக்கும். இவை இலங்கைச் சட்டத்தின்படி அமையும்; உங்கள் நாட்டுச் சட்டம் தரும் நுகர்வோர் உரிமைகள் பாதிக்கப்படாது.
10. தொடர்பு
தமிழ் கொடி (பிரைவேட்) லிமிடெட் — Tamil Kodi (Pvt) Ltd (PV 00273503) · 217, பலாலி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம், இலங்கை · [email protected]
Terms of Service
Last updated: 20 November 2026
Olai (getolai.com) is operated by Tamil Kodi (Pvt) Ltd (PV 00273503), 217 Palali Road, Kondavil, Jaffna, Sri Lanka. Email: [email protected]. By using this site or buying a report you accept these terms.
1. The service
Olai uses the birth date, time and place, or the name, that you provide to calculate and deliver digital reports (PDF, audio explanation, dashboard) in Tamil and English, presenting what classical astrology and numerology books say. Planet positions are calculated with the Swiss Ephemeris.
2. Not advice
Reports present what the books say. They are not medical, legal, financial or psychological advice and do not guarantee any outcome. For important decisions, consult a qualified professional.
3. Who may buy
- You must be over 18 to buy.
- If you give another person's details you must have their permission; for a child you must be the parent or guardian.
- You are responsible for the accuracy of the details you give; a wrong time or place gives a wrong calculation.
4. Prices and payment
Prices are shown on the site in your local currency. Payments are one-time; there are no automatic recurring charges. Card payments are processed securely by Stripe, and in Sri Lanka by PayHere; Olai never stores your card details. Card payments through Stripe (outside Sri Lanka) are collected on our behalf by Tubetamil (Denmark, CVR 33679246) and appear on your statement as "GETOLAI.COM".
5. Delivery
After payment the report is generated automatically and is usually available within minutes on the "My Olai" page (and through the link shown after payment). Every report passes automated checks before release; if a check raises an issue, delivery may take a little longer.
6. Withdrawal and refunds
See our Refund Policy.
7. Use of reports
Reports are for your personal use. You may share the share-cards on social media. You may not resell reports or use them commercially.
8. Limitation of liability
To the extent the law allows, Olai's liability is limited to the amount you paid for the report concerned. Decisions you make based on a report are your own responsibility.
9. Changes and governing law
We may update these terms; the current version is always on this page with its date. These terms are governed by the laws of Sri Lanka; this does not affect the consumer rights the law of your own country gives you.
10. Contact
Tamil Kodi (Pvt) Ltd (PV 00273503) · 217 Palali Road, Kondavil, Jaffna, Sri Lanka · [email protected]
